சேர்மன் ஒரே போடு.. ஆடிப்போய் கிடக்கும் வியாபாரிகள்!


சேர்மன் ஒரே போடு.. ஆடிப்போய் கிடக்கும் வியாபாரிகள்!


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியை சுகாதாரமான நகரமாக தொடர்ந்து பாதுகாக்கவும்,பிளாஸ்டிக்இல்லா நகரமாக மாற்றவும், அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமாமகேஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது.

விழுப்புரத்தில் சசிகலா; தெம்பான அதிமுக தொண்டர்கள்!

இந்த கூட்டத்திற்கு கமிஷனர் (பொறுப்பு) ஜெயப்பிரியா, துணை சேர்மன் கண்ணன் என்ற ராஜு முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சேர்மன் உமாமகேஸ்வரி கூறியதாவது:

சங்கரன்கோவில் நகராட்சியில் நாள்தோறும் தூய்மை பணியாளர் குப்பைகள் வாங்க வரவில்லை என்றாலோ அல்லது வேறு ஏதேனும் சுகாதார குறைபாடு என்றாலோ பொதுசுகாதார அலுவலகத்தில் பொதுமக்கள் நேரில் வந்து தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் 04636 222336 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். நகராட்சி பகுதியில் ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் கடைகளுக்கு வரும்போது துணிப்பைகள் மற்றும் பாத்திரங்களை கொண்டு வர வியாபாரிகள் வலியுறுத்த வேண்டும். வர்த்தக நிறுவனங்கள் மேற்கண்ட விதிகளை நடைமுறைபடுத்த தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து நமது நகரை தூய்மையான நகரமாகவும், திறந்தவெளி பிளாஸ்டிக் இல்லா நகரமாகவும் மாற்ற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சேர்மன் உமாமகேஸ்வரி பேசினார். இதனால் சங்கரன்கோயில் நகராட்சியில் வியாபாரிகள் கலங்கி போய் உள்ளனர்.

Comments

Popular posts from this blog