கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஏர்போர்ட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பயணிகள், ஊழியர்கள் மாஸ்க் அணிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தல்
மீனம்பாக்கம்; சென்னை விமான நிலையத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை மாஸ்க் அணிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் சில மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களும் வெகுவாக குறைந்து விட்டது. பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளே இல்லை. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா உயிரிழப்புகளே இல்லை. இந்தளவுக்கு தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதால், தமிழக அரசு பாதுகாப்பு விதிமுறைகளை வெகுவாக தளர்த்தியுள்ளது.
2 ஆண்டுகளாக கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment