அன்னதானத்தால் ஏற்பட்ட சோகம்! திருவாரூரில் பரபரப்பு !!1906386682


அன்னதானத்தால் ஏற்பட்ட சோகம்! திருவாரூரில் பரபரப்பு !!


நம் தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்கள் தொடங்கிநாளே விழாக்கள் தொடங்கியது என்று கூறலாம். குறிப்பாக கோவில்களில் திருவிழா நடைபெறுவது வழக்கமாக அமைந்துள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது அன்னதானம் என்பது முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த வகையில் திருவள்ளுவர் மாவட்டம் குடவாசல் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது கோவிலின் முக்கிய பங்காக திகழும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அன்னதானம் வாங்கி சாப்பிட்ட 5 குழந்தைகள் உட்பட 18 நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கோவில் திருவிழாவின் போது வழங்கப்பட்ட அன்னதானம் வாங்கி சாப்பிட்ட நபர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments