வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்


வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்


நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெறுவதற்காக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்ககூடியதாக உள்ளது.

அந்தவகையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்கு மக்கள் கொழுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுச்செல்கின்றனர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்(Photos)

பரீட்சைக் கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காலை நேரத்தில் மூடப்பட்டே காணப்பட்டன.

அதேவேளை, எரிபொருள் பவுஸர்கள் வருகை தந்தவுடன் மாலை வேளைகளில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்கள்
பருத்தித்துறை 

பருத்தித்துறை – மந்திகை பகுதியில் கொழுத்தும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து எரிபொருள் பெற்றுச்செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவுடன் நிறுத்த பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இன்று காலை முதல் இடம் பெற்றுள்ளது.

இதனை பெற்றுக் கொள்ளவே கொழுத்தும் வெயிலிலும் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து நிரப்பி செல்கின்றனர்.

 செய்தியாளர்  : தங்கராஜா காண்டீபன்

வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்(Photos)
வடக்கு கிழக்கு பகுதிகளில் கொழுத்தும் வெயிலில் எரிபொருளுக்காக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்(Photos)

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year