தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?


தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி: பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?



பிக் பாஸ் தெலுங்கு ஓடிடி நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவி வெற்றி பெற்றுள்ளார்.

பிந்து மாதவி

நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான் ஸ்டாப் ஓடிடி தெலுங்கு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி துவங்கியது. டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் மட்டும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் பிந்து மாதவி கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களை கவர்ந்த அவர் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.

Twitter-Bindu Madhavi

சாதனை

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற முதல் பெண் போட்டியாளர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் பிந்து மாதவி. அவருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அகில் சர்தக் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார். சிவாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. சில மாதங்களில் துவங்கவிருக்கும் பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ளும் பாஸ் சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தெளிவு

தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் வாரமே உணவுக்காக நட்ராஜுடன் சண்டை போட்டார். தெளிவாக அவர் நடந்து கொண்டது தான் ரசிகர்களை கவர்ந்தது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி மூலம் பிந்து மாதவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். அடிக்கடி ட்விட்டரில் அவர் பெயர் டிரெண்டானது.

பிக் பாஸ் தமிழ்

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வந்தார் பிந்து மாதவி. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஒயில்டு கார்டு போட்டியாளர் பிந்து மாதவி தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 4வது ரன்னர் அப்பாக அறிவிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

Moody Luxe Bedroom Reveal

It s ok to ease into the new year