14-இல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்! தோ்வுத் துறை தகவல்!882635907


14-இல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்! தோ்வுத் துறை தகவல்!


பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள் நகல்களை வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் விண்ணப்பித்தவா்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தோ்வு துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மே மாதம் நடைபெற்ற பொது தோ்வினை எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் 14-ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் இருந்து பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தால் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்து பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அரசு தோ்வு துறையின் இணையதளத்தில் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை இரண்டு நகல்கள் எடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுக் கூட்டல் மற்றும் மறு மதிப்பிற்கான கட்டணத்தையும் மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை ஒப்படைத்து அதற்குரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog